எண்ணூரில் கடல் அரிப்பு பீதியில் மீனவர்கள்
திருவொற்றியூர் :எண்ணூர் நெட்டுக்குப்பம், தாளங்குப்பத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கரைப்பகுதி அரித்து செல்லப்பட்டது. இதனால் கடல் நீர், நெட்டுக்குப்பம் பகுதியில் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால், கடலரிப்பை தடுக்க வேண்டும் என்று மீனவர்கள், சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், எண்ணூரில் கடல¢ அரிப்பை தடுக்க தூண்டில் வலை அமைக்கவும் பாறாங்கற்களை கொட்டவும் ரூ.58 கோடி செலவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக கடல் சீற்றம் அதிகமாகி கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் கரைக்கும், நெட்டுக்குப்பம் குடியிருப்பு பகுதிக்கும் 5 மீட்டர் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் கோட்டாட்சியர் சண்முகம், மாதவரம் தாசில்தார் வரதராவ் ஆகியோர் நேற்றிரவு நெட்டுக்குப்பம் பகுதிக்கு வந்தனர். கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அவர்களிடம், பாறாங்கற்களை உடனே கொட்டி கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்Õ என்று மீனவர்கள் கூறினர். ‘உரிய நடவடிக்கை எடுக்கிறோம்Õ என அவர்கள் உறுதி அளித்தனர். இன்று காலையிலும் கடல் அரிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் பீதியில் உள்ளனர்.