Untitled Document
2012
02
May
ஓட்டேரியில் புதிய ரயில் நிலையம் : வண்டலூர் கிராம சபையில் தீர்மானம்


கூடுவாஞ்சேரி :வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருபவர்களின் வசதிக்காக ஓட்டேரியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று வண்டலூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராணி பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் மலர்விழி தமிழமுதன் முன்னிலை வகித்தார். குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, கொருக்கன்தாங்கல் சுடுகாடு சுத்தம் செய்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வண்டலூர் ஊராட்சியில் நடந்த கிராமசபைக்கு, தலைவர் குணசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வேதகிரி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பணிகள் வசதிக்காக ஓட்டேரியில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும்., வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், பாலாற்று குடிநீர் சீராக கிடைக்க வலியுறுத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஊரப்பாக்கத்தில் தலைவர் ஊ.கோ.பெருமாள் தலைமையிலும் கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசன் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. காரணை புதுச்சேரியில் தலைவர் அனிதா இளவரசன் தலைமையிலும், கீரப்பாக்கம் ஊராட்சியில், தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையிலும், நல்லம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் தயாளன் தலைமையிலும், வேங்கடமங்கலம் ஊராட்சியில் தலைவர் ரவி தலைமையிலும், ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், தலைவர் ஜேவிஎஸ் என்ற மை.ச.ரங்கநாதன் தலைமையிலும், நெடுங்குன்றம் ஊராட்சியில் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும், மண்ணிவாக்கம்  ஊராட்சியில் தலைவர் புருசோத்தமன் தலைமையிலும், பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் தலைவர் ரவி தலைமையிலும், காயரம்பேடு ஊராட்சியில் தலைவர் ஸ்ரீராமன் தலைமையிலும், கல்வாய் ஊராட்சியில் தலைவர் மலா பரமசிவம் தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. முழு சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் தனி நபர் கழிப்பிடம் கட்டுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,