சர்க்கரை ஆலை ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: சர்க்கரை ஆலை ஊழியர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போராட்டம் நடத்தியபோது, மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்குவதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் வழங்கவில்லை. இதையடுத்து கடந்த 4ம்தேதி முதல் அனைத்து சர்க்கரை ஆலை ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு சர்க்கரை இணைய அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் பிரநிதிகளும், சர்க்கரை துறை இயக்குனர் மதிவாணன், கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் தீர்வு ஒன்றை கொண்டு வந்தனர். அதை தொழிற்சங்க பிரநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.