மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை
திருவள்ளூர்: மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் வள்ளுவர்புரம் புத்தர் நகரை சேர்ந்தவர் முனுசாமி (47). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி (43). மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் முனுசாமி. குடி பழக்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறி மனைவி காசு கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் முனீஸ்வரி வெளியே போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த முனுசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.