ஆட்டோ , கார் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் பலி
திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா (49), விவசாயி. மனைவி பாவனி (42). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களது வீட்டில் உறவினர் ரவி வசித்து வந்தார். ஆட்டோ டிரைவரான இவருக்கு வெங்கடலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாவனி, வயிற்று வலிக்காக மதனப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வாரந்தோறும் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று கணவர் வெங்கடரமணாவுடன் ரவியின் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஊடூரு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த கார், திடீரென ஆட்டோ மீது மோதியது. ஆட்டோவில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியாயினர். சவுடேப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.