வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் தனி சிறையில் உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டது. அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் வேலூர் பெண்கள் தனி சிறைக்கு நளினி மாற்றப்பட்டார். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை காரணம் காட்டி நளினிக்கு முதல் வகுப்பு வசதி வழங்கவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். நளினிக்கு முதல் வகுப்பு வசதிகள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தர விட்டது. இந்நிலையில், நளினி அடைக்கப்பட்ட அறையில் 2 நாட்களுக்கு முன்பு முதல் வகுப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அதன்படி அவருக்கு கட்டில், மெத்தை, தலையணை, டேபிள் மற்றும் பேன் வசதி வழங்கப்பட்டது. தினமும் தனியாக தயாரிக்கப்படும் உணவுகள் வழங்கப்படும். காலை மற்றும் இரவில் சப்பாத்தி, கீரை வகைகள், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சிக்கன் வழங்கப்படும். தினமும் காலை, மாலை காபி வழங்கப்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook