Untitled Document
2012
26
Apr
வடகொரிய ராணுவம் பகிரங்க எச்சரிக்கை : அமெரிக்காவை தோற்கடிக்க வடகொரியாவால் முடியும்


பியாங்யாங் : போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

வடகொரிய ராணுவம் உருவாக்கப்பட்டு 80ம் ஆண்டு விழா, பியாங்யாங்கில் நடந்தது. இதில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அவர் முன்னிலையில் துணை மார்ஷல் ரியாங் ஹோ கூறுகையில், அமெரிக்கா, தென் கொரியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுகிறது. இதை சமாளிக்க வடகொரிய ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டிய முக்கியம். இதை உணர்ந்து வடகொரிய புதிய தலைவர் கிம் ஜாங், ராணுவத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். அணுஆயுதம், ஏவுகணை பலம் நிறைந்த நாடாக வடகொரியா உள்ளது. நவீன ஆயுதங்களை கையாள்வதில் எங்கள் மக்கள் திறமையானவர்கள். ஒரே ஒரு தாக்குதலில் அமெரிக்காவை தோற்கடிக்கும் பலம் எங்களிடம் உள்ளது என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,