Untitled Document
2012
25
Apr
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் : 150 பேர் கைது, போலீசார் இழுத்து சென்றனர்


நெல்லை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய நெல்லை மண்டல அளவில், அமைப்பாளர், சமையலர், உதவியாட்களுக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம்  பாளை மார்க்கெட் மைதானத்தில் இன்று (25ம்தேதி)  தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை மாவட்ட செயலாளர்கள் நெல்லை ஆறுமுகம், விருதுநகர் முனியசாமி, தூத்துக்குடி மாரியப்பன், குமரி நீலதங்கம் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

அப்போது போலீசார் திடீரென உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து அவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது பெண்கள், போராட்டம் நடந்த இடத்தில் இருந்து வரமறுத்த தால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். மொத்தம் 55 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,