ஆவடி : டாஸ்மாக் கடை பாரில் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோடை காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் பீர் அதிகம் விற்பனையாகிறது. பல பகுதிகளில் ஜில் பீர் கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அம்பத்தூர், ஆவடி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் பீர் பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தெரிந்தது. கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதிகளில் உள்ள பார்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அம்பத்தூர் சண்முகபுரம், புதூர், ஆவடி வசந்தம் நகர் பகுதிகளில் உள்ள பார்களில் பீர் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பார் ஊழியர்கள் விழுப்புரம் குப்புசாமி (50), பெரவள்ளூர் ராஜி (47), ஆவடி சம்பத் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பீர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook