புழல் : கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன், போலீசில் சரண் அடைந்தார். இச்சம்பவத்தால் சென்னையை அடுத்த கொளத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கொளத்தூர் நேர்மை நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சந்தன் (55). கோயில் திருவிழா நடக்கும் இடங்களில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (45). இவர்களது மகன் முருகானந்தத்துக்கு திருமணமாகிவிட்டது. ஆட்டோ டிரைவரான இவர், மனைவியுடன் தந்தையின் வீட்டின் அருகிலேயே வசிக்கிறார். இவர்களது சொந்த ஊர் சிதம்பரம். ஒரு வருடத்துக்கு முன்புதான் கொளத்தூருக்கு வந்துள்ளனர்.
சந்தன், கஞ்சா பழக்கம் உடையவர். வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது, மது அருந்தி விட்டு, கஞ்சா போட்டுக் கொண்டுதான் வருவாராம். இது கிருஷ்ணவேணிக்கு பிடிக்கவில்லை. பலமுறை கணவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணவேணிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அரசல்புரசலாக பேச ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் சந்தனின் காதுக்கும் எட்டியது. கிருஷ்ணவேணியிடம் இது பற்றி கேட்க, அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
நேற்றிரவு, வியாபாரத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு போதையில் வந்தார் சாந்தோம். அப்போது, கள்ளக்காதல¢ விவகாரத்தை பற்றி கிருஷ்ணவேணியிடம் கேட்டு சந்தன் தகராறு செய்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. ஆத்திரம் அடைந்த சந்தன், மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார். திடீரென அருகில் கிடந்த உடற்பயிற்சி செய்யும் கர்லா கட்டையை எடுத்து கிருஷ்ணவேணியின் தலையில் பயங்கரமாக அடித்தார். ரத்தம் கொட்டிய நிலையில், கிருஷ்ணவேணி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு மகன், மருமகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினர். கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சந்தன் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook