பிளே ஸ்டேஷன் வாங்கி தராததால் 4 வயது சிறுவன் ஆத்திரம் தந்தை சுட்டுக் கொலை
ரியாத், ரியாதின் தெற்கு பகுதியில் உள்ளது ஜிசான். இங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் கோபத்தில் தந்தையை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையுடன் சிறுவன் ஷாப்பிங் சென்ற போது, பிளே ஸ்டேஷன் வாங்கித் தர கேட்டான். அதை வாங்கி தர முடியாது. வேறு ஏதாவது வாங்கி கொள் என்று தந்தை கூறியுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்தான் சிறுவன். ஷாப்பிங் சென்று வீடு திரும்பிய தந்தை, உடை மாற்ற சென்ற போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை அருகில் வைத்துள்ளார்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த சிறுவன், பாய்ந்து சென்று அந்த துப்பாக்கியை எடுத்து தந்தையை பார்த்து திடீரென சுட்டான். இதில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.