கும்பகோணம் :கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுநோய் கிருமி தாக்தியதால் ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையாக கும்பகோணம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணி நேர தாய்சேய் நலபிரிவு உள்ளிட்ட 28 வகையான நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இருந்து தொற்றுநோய் நிபுணர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து சில மாதிரிகளை எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுநோய் தாக்கப்பட்டுள்ளதால், இங்கு அறுவை சிகிச்சை செய்ய வேண¢டாம் என பரிந்துரை செய்தனர். அதனால் கடந்த நான்கு மாதமாக இங்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதனால் அறுவை சிகிச்சை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசின் மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில், கும்பகோணம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் உடனடியாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கடந்த 5ம் தேதி முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் சிறிய அளவிலான அறுவை சிகி¢¢ச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.
விரைவீக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள கும்பகோணத்தை அடுத்த கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), வில்லியவரம்பல் கிராமத்தை சேர்ந்த கருணாகரன்(30) ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் கடந்த 16ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அன்று மாலையே இருவருக்கும் காய்ச்சல், மயக்கம், மூச்சுத்தினறல் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியன் கடந்த 20ம் தேதி இறந்தார். கவலைக்கிடமாக உள்ள கருணாகரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு நேற்று முன்த¤னம் முதல் மூடப்பட்டள்ளது என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook