ஹீரோவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் : ஓவியா பேச்சால் நடிகர் அலறல்
‘ஹீரோவுடன் எனக்கு கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதுÕ என்று ஓவியா பேசியதை கேட்டு மேடையிலேயே அலறினார் ஹீரோ.
குஷ்பு தயாரிக்கும் படம் ‘கலகலப்புÕ. சுந்தர்.சி இயக்குகிறார். விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஓவியா பேசும்போது, ‘‘களவாணி, மெரினா போன்ற படங்களில் கிடைத்த நல்ல பெயர், என்னை பலத்த போட்டிக்கு இடையே நிலை நிறுத்தி இருக்கிறது. எந்த படமாக இருந்தாலும் கேரக்டரோடு ஒன்றிவிடுவேன். ஹீரோக்கள் விமல், சிவகார்த்திகேயனுடன் நடித்தபோது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனது. இப்படத்தில் சிவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன்.
இதில் சிவாவுடன் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்அவுட் ஆனது என்கிறார்கள். சிவாவுடனும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்அவுட் ஆனதுÕÕ என்றார். இவ்வாறு ஓவியா பேசியபோது மேடையிலிருந்த சிவா பதற்றத்துடன் மைக் முன் ஓடிவந்து, ‘அம்மா தாயே... என் வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கு. இந்த நேரத்துல கெமிஸ்ட்ரி.. அது, இதுன்னு சொல்லி சிக்கல்ல மாட்டிவிடாதே. இந¢த படத்துல இன்னொரு ஹீரோயின் அஞ்சலியோடுதான் ஓவியாவுக்கு கெமஸ்ட்ரி சூப்பரா ஒர்க்அவுட் ஆச்சு. ரெண்டு பேரும் ஷூட்டிங் நேரத்துல நட்பா பேசிக்கிட்டே இருப்பாங்கÕÕ என்றார். விழாவில் விமல், அஞ்சலி, யூடிவி தனஞ்செயன், சுந்தர்.சி, இசை அமைப்பாளர் விஜய் எபினேசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.