லவ்வுக்கு டாடா காட்டிட்டு சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த நயன் ஹீரோயின், பேமென்ட் விஷயத்துல ரொம்பவே கறாரா இருக்காராம்... இருக்காராம்... கோலிவுட், டோலிவுட் எதுவா இருந்தாலும் டாப் ரேஞ்சுலதான் பேமென்ட் பேசுறாராம்... பேசுறாராம்... கோலிவுட்டில் பாஸு பட தயாரிப்பு மறுபடியும் தன் படத்துல நடிக்க டேட் கேட்டப்போ, பெரிய சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே கொடுத்த சம்பளத்துக்கும் இந்த சம்பளத்துக்கும் மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசமிருந்ததால தயாரிப்பு ஷாக் ஆயிட்டாராம்... ஷாக் ஆயிட்டாராம்...
சீனியர் ஹீரோக்களுக்கு மல்லுவுட்ல மார்க்கெட் படுத்துருச்சாம்... படுத்துருச்சாம்... இந்த வருஷத்துல மூட்டி, லால் ஹீரோக்களோட படங்கள் வசூல்ல டான்ஸ் ஆடிப்போக, இளம் ஹீரோங்க படங்கள¢ வசூல்ல பட்டைய கிளப்பிடுச்சாம்... கிளப்பிடுச்சாம்... இதனால பெரிய ஹீரோக்களோட படங்களோட மார்க்கெட் டல்லடிக்குதாம். பூஜை போட்டாலும், படத்தை முடிச்சாலும் வாங்குறதுக்கு யாரும் வரமாட்டேங்கிறாங்களாம். இதனால பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கணும்னு சிலர் போர்க்கொடி தூக்குறாங்களாம்... தூக்குறாங்களாம்...
விரல் நடிகரோட பெயர் கொண்ட இயக்கம், கவலையில இருக்காராம்... இருக்காராம்... மூணு நடிகரை வச்சு படம் பண்ண, அவரோட கால்ஷீட்டை வாங்கினாரு. மூணு படத்தை முடிச்சிட்டு நடிக்கிறேன்னு சொன்ன ஹீரோ, இந்திக்கு போயிட்டாரு. அடுத்ததா தமிழ், இந்தியில உருவாகுற இன்னொரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துட்டாரு. இதனால இயக் கம் உடைஞ்சு போயிட்டா ராம்... போயிட்டாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook