Untitled Document
2012
13
Apr
பயோமெட்ரிக் ஐ.டி. கார்டு புகைப்பட பணி மே மாதம் துவக்கம் : பொதுமக்கள் விரல் ரேகைகள் பதிவு



கோவை : தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க அடுத்த மாதம் போட்டோ, விரல் ரேகை பதிவு பணி துவங்குகிறது. நாடு முழுவதும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பணிகள் கடந்த 2010ல் துவங்கியது. கடந்த 2011ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மையமாக கொண்டு தேசிய அடையாள அட்டைக்கான பட்டியல் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை, அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அதற்கேற்ப பயோ மெட்ரிக் முறையில் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் விரல் ரேகை, நிரந்தர முகவரி, உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு முதல் கட்டமாக கிராமம் வாரியாக உள்ளூர் பட்டியல் தயாரித்து கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. கிராம அளவிலான பதிவுக்கு கிராம நிர்வாக அலுவலரும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர்களும், நகராட்சி வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள் உள்ளூர் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட தினங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு புகைப்படம், விரல் ரேகை எடுக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தகவல் ஏதும் விடுபடாமல் பொதுமக்கள் எளிதில் தரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய விளம்பர முன்னேற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி மற்றும் விரல் ரேகை பதிவுக்கு மேற்கொள்ளவேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்க அடுத்த சில தினங்களில் மாவட்ட அளவிலான பதிவாளர்கள் கூட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது. எந்தெந்த மாவட்டங்களில் எப்போது நடக்கும் என்பது அறிவிக்கப்படும். இதை தொடர்ந்து மாவட்ட வாரியாக இப்பணியில் ஈடுபடுவோர்க்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.

பகுதி வாரியாக பதிவாளர்கள் :

மாவட்ட பதிவாளர் - கலெக்டர்
மாநகராட்சி பதிவாளர் - மாநகராட்சி கமிஷனர்
நகராட்சி பதிவாளர் - மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர்
தாலுகா அளவிலான பதிவாளர் - தாசில்தார்
உள்ளூர் நகராட்சி பதிவாளர் - நகராட்சி கமிஷனர்
உள்ளூர் பேரூராட்சி பதிவாளர் - செயல் அலுவலர்
உள்ளூர் கிராம பதிவாளர் - கிராம நிர்வாக அலுவலர்
நகராட்சி வார்டு பதிவாளர் - பில் கலெக்டர், சுகாதார ஆய்வாளர்

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,