Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
29
Mar
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொடூர கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சி :முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், இன்று காலை காரில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கல்லணை அருகே வீசிவிட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் (48). திருச்சி தில்லைநகர் 10,வது கிராசில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜனனி மினரல்ஸ், கேர் பொறியியல் கல்லூரி உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார். அரசியலில் நேருவுக்கு உறுதுணையாக இருந்தார். கடந்த மக்களவை தேர்தலின்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இன்று அதிகாலை 5.10 மணிக்கு ராமஜெயம் வாக்கிங் சென்றார். 7 மணி வரை அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் வழக்கமாக ஷட்டில் ஆடும் இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கும் வரவில்லை என தெரிந்தது. இதுபற்றி சென்னையில் இருந்த நேருவுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் பலரிடம் போனில் விசாரித்துள்ளார். ராமஜெயம் மீது பல வழக்குகள் இருப்பதால் போலீசார் அவரை கைது செய்திருக்கலாம் என கருதி போலீசிலும் விசாரித்தனர். அவர் கைது செய்யப்படவில்லை என தெரிந்தது. இதனால், குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அரசியல் மற்றும் தொழில் போட்டியில் ராமஜெயத்தை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சினர். இதுகுறித்து போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது.

 போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தேடும் பணியை தொடங்கினர். இதற்கிடையே, ராமஜெயம் கடத்தப்பட்டதாக தகவல் பரவியதும் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் நேரு வீட்டு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காலை 8.45 மணிக்கு ராமஜெயத்தின் செல்போனில் இருந்து அவரது மனைவி லதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நேருவின் நம்பரை கொடு என கேட்டுள்ளார். நம்பரை கொடுக்கும் முன்பு இணைப்பை துண்டித்து விட்டார். ராம்ஜிநகர் அருகே உள்ள கேர் கல்லூரிக்கும் அதே  நபர் போனில் பேசி நேரு நம்பரை கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு தில்லைநகர் போலீசில் லதா புகார் கொடுத்தார். இந்நிலையில், பகல் 12 மணி அளவில் கல்லணை அருகே புதரில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி மாநகர கமிஷனர் சைலேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு  விரைந்தனர். திருவளர்ச்சோலை அருகே பென்னி டெல்டா என்ற இடத்தில் காவிரி கரையோரம் உள்ள புதரில் சடலம் கிடந்தது. அதன் மீது பிரவுன் கலர் போர்வை போர்த்தப்பட்டு இருந்தது. போர்வையை விலக்கி பார்த்தபோது அது ராமஜெயத்தின் சடலம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது. இரும்பு கம்பியால் அடித்தும், கழுத்தை நெரித்தும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வாயில் துணியை திணித்து, கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. சடலம் கிடந்த இடத்தில் ரத்தம் அதிக அளவில் இல்லை. எனவே, அவரை வேறு இடத்தில் கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. அது ராமஜெயத்தின் உடல்தான் என்பதை அவரது மகன் உறுதி செய்தார். இதையடுத்து சடலத்தை போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ராமஜெயத்துக்கு அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் போட்டி இருந்தது. இதன் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ராமஜெயம் வாக்கிங் புறப்பட்ட சிறிது நேரத்தில், அவரது வீட்டு அருகில் நின்றிருந்த ஒரு கார் பின் தொடர்ந்ததாகவும், அதில் 5,க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த காரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
karthick - chennai
3/29/2012 -- 18:12:43

அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன்

muthuraman.pl - chennai
3/30/2012 -- 13:16:49

ரத்தக் கண்ணீர் படத்தில் வரும் குற்றம் பற்றிய ஒரு பாட்டுத்தான் நினைவு வருகிறது

VISWANATHAN - TRICHY
3/30/2012 -- 14:5:25

இது ஒரு கொடுவுற செய்தி , எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana