வெள்ளி வியாபாரியிடம் 10 லட்சம் அபேஸ்
திருப்பதி : ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாசராவ். வெள்ளி பொருட்கள் வியாபாரி.நேற்று முன்தினம் 15 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2.50 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.10 லட்சம் பொருட்களுடன் சித்தூர் நோக்கி பஸ்சில் வந்தார். மதனப்பள்ளி அடுத்த வால்மீகிபுரம் காந்தி பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, இவரது வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணப்பையை பின்சீட்டில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். சீனிவாசராவ் மற்றும் பயணிகள் வாலிபரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வால்மீகிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.