சிவில் நீதிபதி பணிக்கு நாளை எழுத்துதேர்வு
நாகர்கோவில் : தமிழகம் முழுவதும் கோர்ட்களில் சிவில் நீதிபதி (இளநிலை) பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணியில் சேருவதற்கு வயது வரம்புடைய இளம் வக்கீல்கள் மற்றும் பணி அனுபவம் பெற்ற வக்கீல்கள் ஏராளமானவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணிக்கான எழுத்து தேர்வு சென்னை, நெல்லை உள்பட 9 மையங்களில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) தொடங்கி, நாளை மறுநாளும் நடை பெறுகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்து 887 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னையில் 2,137 பேர், மதுரையில் 1,733 பேர், நெல்லையில் 1,150 பேர், கோவையில் 888 பேர், சேலத்தில் 792 பேர், திருச்சியில் 644 பேர், தஞ்சாவூரில் 36 பேர், வேலூரில் 394 பேர், விழுப்புரத்தில் 587 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 887 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இந்த தேர்வுகளை கண்காணிக்க நீதிபதிகள் வி.தனபாலன், ஆர்.எஸ்.ராமநாதன் ஆகியோர் மேற்பார்வையாளர்
களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.