பொன்னேரி : தர்பூசணியை பாதுகாக்க போடப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட் டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் தனது நிலத்தில் தர்பூசணி பயிரிட்டுள்ளார். காட்டு பன்றிகளிடம் இருந்து தர்பூசணியை பாதுகாக்க தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள் ளார். மின்வேலி அமைக்க அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ஏலியம்பேடு கிராமத்தை சேர்ந்த சின்னபையன் (65) என்பவர் நேற்று தர்பூசணி தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளார். வரப்பில், கால் வழுக்கியதால் மின்வேலியில் கை வைத்துவிட்டார். இதில், மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.பொன்னேரி போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், நிலத்தின் உரிமையாளர் ராஜேந்திரனை கைது செய்தனர். பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சின்ன பையன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook