சுமோ கவிழ்ந்து ஒருவர் பலி டிரைவர் ஓட்டம்
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே நடுரோட்டில் சுமோ கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். அவருடன் வந்தவர்களும் டிரைவரும் ஓடிவிட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோளூர் காந்தி நகரை சேர்ந்தவர் பிரசாத். டிராவல்ஸ் நடத்துகிறார். இவரது சுமோ காரில் 8 பேர் சென்னைக்கு வந்தனர். டிரைவர் ரவிச்சந்திரன் காரை ஓட்டி வந்தார். திருவள்ளூர் பூந்தமல்லி சாலையில் முருக்கஞ்சேரி பகுதியில் இன்று அதிகாலை கார் வந்தது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோபால் (30) என்பவர் அந்த இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்தவர்களும் டிரைவரும் ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவல்படி, மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், டிரைவர் ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.