Untitled Document
2012
13
Mar
அண்ணா நூலகத்தை பராமரிக்காதது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காதது ஏன்? என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வக்கீல் புகழேந்தி, கவிஞர் இளையபாரதி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை ஐகோர்ட் விசாரித்து, இடமாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்தது. அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. Ôஅரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிடக்கூடாதுÕ என அரசு தரப்பில் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று, தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, ÔÔஅண்ணா நூற்றாண்டு நூலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஏர்கண்டிஷன்கள் வேலை செய்யவில்லை. வார புத்தகங்கள் வழங்கப்படுவதில்லைÕÕ என்றார். இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார். வக்கீல் காந்தி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ÔÔஉலக தரம் வாய்ந்த இந்த நூலகத்தை முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது. நூலக பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்ÕÕ என்றனர். தமிழக அரசு ப்ளீடர் வெங்கடேஷ் ஆஜராகி, ÔÔஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து நூலகத்தை நல்ல முறையில் பராமரித்து வருகிறோம். மனுதாரர்கள் கூறும் புகாரில் சிறிதளவும் உண்மையில்லை. ஆதாரமற்றது. உள்நோக்கத்துடன் இந்தக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் நிறுத்தப்படவில்லை. இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்த வேண்டும்ÕÕ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ÔÔஏற்கனவே குயின்மேரிஸ் கல்லூரியை மாற்ற திட்டம் போட்டீர்கள். தற்போது உலக தரம் வாய்ந்ததாக கூறப்படும் நூலகத்தை மாற்ற முடிவு செய்துள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? நூலகத்தை சரியாக பராமரிக்காதது ஏன்?ÕÕ என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,