Untitled Document
2012
13
Mar
மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் இத்தாலி கப்பலை விடுவிக்க முடியாது : ஐகோர்ட்டில் கேரள அரசு பதில் மனு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கொச்சி : குமரி மீனவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரள போலீசால் சிறைபிடிக்கப்பட்ட இத்தாலிய சரக்கு கப்பலை விடுவிக்க முடியாது என கேரள அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள¢ மீது இத்தாலிய சரக்கு கப்பல் என்ரிகா லெக்சியின் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த வேலன்டைன் ஜலாஸ்டைன், அஜேஷ் பிங்கி ஆகிய இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ், பாதுகாப்பு வீரர்கள் லத்தோர் மாசிமிலானோ, சால்வதோர் ஜிரோனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சரக்கு கப்பல் என்ரிகா சிறை பிடிக்கப்பட்டு கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த 28 நாட்களாக சிறை பிடிக்கப்பட்டிருக்கும் கப்பலை விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் கொச்சி ஐகோர்ட்டில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இது தொடர்பாக கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. கேரள அரசு சார்பாக நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், Ôமீனவர் கொலை தொடர்பான வழக்கு விசாரணை முடியாத நிலையில் கப்பலை விடுவிக்க கூடாதுÕ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மார்ச் 15க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,