ஸ்டேட் வங்கியில் கிளார்க் (அசிஸ் டென்ட்) 9500 காலியிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. இவற்றில் 3100 காலியிடங் களுக்கான அறிவிப்பு டிச.27,2011ல் வெளியானது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த அறிவிப்பில் முதலில் மார்ச் 18,2012ல் எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டது. தற்போது அது மாற்றப்பட்டு மே, 27, ஜூன் 3 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. கூடுதலாக ஸ்டெனோகிராபர் பணிக்கு 1000 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1. கிளரிக்கல் அசிஸ்டென்ட்: 8500 இடங்கள் (பொது-3145, ஓபிசி-1949, எஸ்சி-3069, எஸ்டி-1337). இவற்றில் சென்னை சர்க்கிளில் அதாவது தமிழகத்துக்கு 525ம், புதுச்சேரிக்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
2. ஸ்டெனோ கிராபர் (ஆங்கிலம்)-900 இடங்கள், ஸ்டெனோகிராபர் (இந்தி)-100 இடங்கள். தகுதி: பிளஸ் 2வில் குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு டிகிரி.
வயது: 1.12.2025 தேதியின்படி 18 முதல் 28க்குள். விண்ணப்ப கட்டணம்: அசிஸ் டென்ட் பணிக்கு ஓபிசி/பொதுப்பிரிவினர் ரூ.350ம், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.50ம் கட்டணமாக செலுத்த வேண்டும். அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் (இந்தி மட்டும்) பதவிக்கு ஓபிசி/பொதுப்பிரிவினர் ரூ.500ம், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.50ம் கட்டணமாக செலுத்த வேண்டும். அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டெனோ கிராபர் (ஆங்கிலம்) பணிக்கு ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினர் ரூ.500ம், இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.50ம் கட்டணமாக செலுத்த வேண்டும். அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டெனோ கிராபர் (ஆங்கிலம், இந்தி) பணிக்கு கட்டணமாக ரூ.650ம், இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.50ம் கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளங்களை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook