| |||||
|
2012
02
Mar சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 6 கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பறக்கும் படையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அதிரடிப் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மதிமுக கூட்டத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயலிடம் தேவர்புரம் செக்போஸ்டில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நேற்று சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது நெல் வியாபாரி ஒருவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 சோதனை சாவடிகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 70 ஆயிரம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடும் சோதனை இருந்தாலும் புறநகர் பகுதிகளில் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாவா மும்முரமாக நடப்பதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவிலில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் தங்கள் வாகனங்களில் அனுமதி பெற்றே கட்சி கொடிகளை கட்ட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நேற்று புளியங்குடி சாலையில் அனுமதி பெறாமல் அதிமுக கொடியுடன் சென்ற காரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
rajan - sankarankovil
3/2/2025 -- 15:53:37 sankarankovil இடைதேறில் அதிதிமுக படம் கண்பிகவேண்டும் ,தயவு தேது அதிதிமுக போட்டதிக இலையென்றால் தமிழ்நாடு மக்களின் வாயாறு எரித்து போகும் ,யாருக்கு நள்ளும் பொட்டுகள் பஸ் ,வேலை உயரு ....
|
|