Untitled Document
2012
02
Mar
இளைஞர் எழுச்சி நாள் நலத் திட்ட உதவி: மா.சுப்பிரமணியன் வழங்கினார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை : இளைஞர் எழுச்சி நாளை  முன்னிட்டு லேப்டாப், தையல் எந்திரம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை  முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், ‘‘இளைஞர் எழுச்சி நாளாக‘‘ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு லேப்டாப்கள், தையல் எந்திரங்கள், இஸ்திரி பெட்டி, 3 சக்கர சைக்கிள் ஆகியவற்றை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இளைஞர் அணி துணை செயலாளர்கள் சுகவனம்,  சுபா.சந்திர சேகர், சுப.த.சம்பத், ஆர்.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா முன்னிலை வகித்தனர். விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். சிலம்பொலி செல்லப்பன், திண்டுக்கல் லியோனி, சுப. வீரபாண்டியன், அப்துல் காதர், ஸ்டாலின் கவுசல்யா ஆகியோர் பேசினார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்த்துப் பாடல் பாடினார். தாயகம் கலி தொகுத்து வழங்கினார்.ஆர்.டி.சேகர், கு.க.செல் வம், கிரிராஜன், பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள், இளைஞர் எழுச்சி நாள் முன்னிட்டு சைதாப்பேட்டை 140ம் வட்ட திமுக சார்பில் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் பொதுக் கூட்டம் நடந்தது. கே.எஸ்.ரூசோ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன்,  முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ.வேலு, திருச்சி செல்வேந்திரன், நடிகர் வாகைசந்திரசேகர், வசந்தி ஸ்டான்லி, கோவி செழியன், நெல்லிக் குப்பம் புகழேந்தி, மகேஷ் குமார், கவிராஜ், தமிழரசு ஆகியோர் பேசினார்கள். முன்னதாக மயிலை தேவன் இசை நிகழ்ச்சி நடந்தது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,