ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை
திருச்சியில் உள்ள இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் உள்ள ஹெவிஅலாய் பெனட்ரேட்டர் திட்டப்பிரிவில் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: துர்வான்: 8 இடங்கள் (பொது-4, ஓபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 20ல் இருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி. உடற்தகுதி: குறைந்த பட்சம் 165 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு விரி வடையும் போது 77 செமீ.ல் இருந்து 82 செ.மீ.க்கு அதிகரிக்க வேண்டும். எடை 45 கிலோ என்ற அளவில் இருக்க வேண்டும். உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்கிரீ னிங் டெஸ்ட்டுக்கு அனுமதிக்கப்படுவர். இதில் 100 மீட்டர் தூரத்தை 15 வினாடிகளில் ஓடிக் கடக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங் களுக்கு பிப்.11-17 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 3.