யூகோ வங்கியில் 1100 ஆபீசர் பணி
யூகோ வங்கியில் காலியாக உள்ள 1100 புரொபஷனரி ஆபீசர்ஸ் பணியிடங்களுக்கு டிகிரி படித்தவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: புரொபஷனரி ஆபீசர். ஜே.எம். ஜி.எஸ்.-1. 1100 இடங்கள் (பொது-568, ஓபிசி-286, எஸ்சி-163, எஸ்டி-83). தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டம். அத்துடன் வங்கி பொதுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 136 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் 126 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.வயது: 20 லிருந்து 30க்குள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ. 200ஐ (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ரூ.50) வங்கி இணையதளத்தில் பதிவிறக்கப்பட்ட சலானை பூர்த்தி செய்து செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வங்கிப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ucobank.com என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 17.