இந்தோ-திபெத் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி : டிப்ளமோ தகுதி
மத்திய போலீஸ் படை களில் ஒன்றான இந் தோ-திபெத் எல்லை காவல் படையில் காலியாக உள்ள 10 சப்-இன்ஸ்பெக்டர் (ஓவர்சீர்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.
சப்-இன்ஸ்பெக்டர் (ஓவர்சீர்): 10 (பொது-4, எஸ்சி-4, ஓபிசி-2). சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர படிகள். வயது: 29.2.2025 தேதிப் படி 20ல் இருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி யுடன் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ. விண் ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை சென்ட்ரல் ரெக்ருட் மென்ட் பீ ஸ்டாம்ப் அல்லது போஸ்டல் ஆர்டர் அல்லது டிடி எடுக்க வேண்டும். ஓட்ட தேர்வு, உடல் திறனறிவு தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப் படையில் விண்ணப்பதாரர் கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங் களுக்கு www.itbpolice.nic.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Inspector General - Chief Engineer,
Directorate General, ITB Police, Block2, CGO Complex, Lodhi Road, New Delhi 110 003. விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: பிப்.29.