|
|||||
|
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு : சென்னை&தூத்துக்குடி சிறப்பு ரயில்
கருத்துகளை தெரிவிக்க சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகைய முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு 12ம் தேதி சிறப்பு ரயில் (06101) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து 13ம் தேதி மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06102), மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்பூலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, மீளவிட்டான் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் சில
|
|