Untitled Document
ஆஸி.யை வலுப்படுத்த வார்ன் 10 டிப்ஸ்
கருத்துகளை தெரிவிக்க

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 1&3 என்ற கணக்கில் இழந்துள்ளது. மேலும் இந்த தொடரில் ஆஸி. வீரர்களின் செயல்பாடுகள் படுமோசமாக அமைந்தன. இந்நிலையில் அணியை வலுப்படுத்த மாஜி வீரர் வார்ன் 10 டிப்ஸ்கள் வழங்கியுள்ளார். அதன் விவரம்:
சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்கள் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் ஆடவேண்டும்.
வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கக்கூடாது. அனைத்து ஆட்டங்களிலும் ஆடவேண்டும்.
ஒரே அணிக்கு எதிராக 7 ஆட்டங்களை நடத்தக்கூடாது. 5 ஒன்டே, மூன்று 20&20 ஆட்டங்களாக நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆட்டமும் முடிந்தவுடன் வீரர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்த வேண்டும்.
வீரர்களின் உடல் திறன், மன கட்டுப்பாட்டு ஆகியவற்றை மேம்படுத்த கூடுதல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்.
பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் போகிறதே என்று கவலைப்படாமல் விக்கெட்டுகள் வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். ஸ்டம்புகளை சிதறடிப்பதே இலக்காக இருக்க வேண்டும்.
பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியின் போது பந்து வீச்சாளர்கள்தான் பந்து வீசவேண்டும். மெஷினை பயன்படுத்தக்கூடாது.
அணி வீரர்களிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டை கொண்டுவரவேண்டும்.
கிரிக்கெட் என்பது வீரர்களுக்கான வேலை கிடையாது நாட்டிற்காகத்தான் ஆடுகிறோம் என்ற உணர்வை வீரர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்த வேண்டும்.
சிறந்த அணியாகயிருக்க திறமையை மேலும் மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த