|
|||||
|
84 பெட்டிகளுடன் சரக்கு ரயில் வெள்ளோட்டம்
கருத்துகளை தெரிவிக்க திருவொற்றியூர்: தண்டையார்பேட்டையில் இருந்து 84 பெட்டிகளுடன் சரக்கு ரயில் வெள்ளோட்டம் இன்று நடந்தது. சரக்கு ரயில் சேவையை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டு சரக்கு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 6ம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து ரேனிகுண்டாவுக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. காலை 9.45 மணிக்கு புறப்பட்ட இந்த சரக்கு ரயிலில் மொத்தம் 84 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், Ôவழக்கமாக ஒரு சரக்கு ரயிலில் 42 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இப்போது நேரத்தை குறைக்கும் வகையில் இரண்டு ரயிலுக்கான பெட்டிகளை அதாவது 84 பெட்டிகளை ஒரே ரயிலில் இணைத்து வெள்ளோட்டம் விட்டுள்ளோம். இது வெற்றியடைந்தால் மற்ற சரக்கு ரயில்களும் இதுபோல இயக்கப்படும்Õ என்றார். மேலும் சில
|
|