இலி நடிகையுடன் ஐடி சேர மறுத்த நடிகர்
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
கோலிவுட் பிரெண்ட் படத்தை முடிச்சிட்டு டோலிவுட்டுக்கு போன இலி ஹீரோயினுக்கு படங்கள் குவியுதாம். ஜூனியர் என்டிஆர் நடிகரின் படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு முடிவு பண்ண¤னாராம். இது பற்றி ஹீரோவிடம் சொன்னப்போ, நோ சொல்லிட்டாராம்... நோ சொல்லிட்டாராம்... ஏற்கனவே ரெண்டு படத்துல ஜோடியா நடிச்சப்போ இலியின் போக்கு ஹீரோவுக்கு பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... தன் எதிர்லேயே பந்தா பண்ண¤னதால ஹீரோ வெறுத்துட்டாராம். அதை மனசுல வச்சிதான் இப்போ ஜோடி சேர மறுத்துட்டாருன்னு யூனிட்ல பேசுறாங்களாம்... பேசுறாங்களாம்...
பாலிவுட்டுக்கு போன பிசின் ஹீரோயின் போக்குல ந¤றைய மாற்றமாம்... மாற்றமாம்... முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்கு வந்தா ஹீரோ, இயக்கத்துக்கிட்ட மட்டும் கலகலப்பா பேசுவாராம். இப்போ ஷூட்டிங்கிற்கு வந்தா, செட்ல வேலை செய்யறவங்ககிட்டயெல்லாம் சிரிச்சி பேசி பழகுறாராம். பிசின் நடிகையோட புது அப்ரோச் பற்றி கேள்விப்பட்ட சில ஹீரோயினுங்க, இதுக்கு விடை தெரியாம குழப்பமா இருக்காங்களாம்... இருக்காங்களாம்...
நிறைய படங்கள்ல வில்லனா நடிச்ச Ôசண்டக்கோழிÕ லால் நடிகரு, இப்போ மல்லுவுட்லதான் கவனமா இருக்காராம்... இருக்காராம்... சமீபத்துல சில இயக்குனருங்க வில்லனா நடிக்க கால்ஷீட் கேட்டப்போ மறுத்துட்டாராம். ‘மல்லுவுட்ல ஹீரோவா நடிக்க வாய்ப்புகள் வருது. இந்த நேரத்துல தமிழ்ல வில்லனா நடிச்சா இமேஜ் பாதிக்கும்Õனு காமெடி பண்றாராம்... பண்றாராம்...