துபையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை அணி படுதோல்வி அ¬ டந்தது. இந்நிலையில் இரு அணிகளும் நேற்று 2020ல் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 19.3 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. சந்திமால் 44 பந்தில் 6 பவுண்டரியுடன் 56 ரன் விளாசினார். தில்ஷான் 28, தரங்கா 12, மேத்யூஸ் 14 ரன் எடுத்தனர். சந்திமால் அதிரடியாக ஆடிய போதும் அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன் களில் ஆட்டமிழந்ததால் மிகப்பெரிய ஸ்கோரை இலங்கை அணியால் குவிக்க முடியாமல் போனது. பாக். தரப்பில் சீமா 4, உமர்அக்மல் 2, சையத்அஜ்மல், முகமதுஹபீஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடி பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. மிஸ்பாஉல்ஹக் 38 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 48 ரன் விளாசினார். ஆசாத்ஷபீக் 33, அப்ரிடி 22, இம்ரான்பர்கத் 19 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா, பெரைரா, பெர்னா ண்டோ, மென்டிஸ், தில்ஷான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook