Untitled Document
2011
25
Nov
கனிமொழி ஜாமீன் மனு ஐகோர்ட்டில் விசாரணை


புதுடெல்லி : திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை, டெல்லி ஐகோர்ட்டில் இன்று தொடங்கியது. கனிமொழியின் மனுவை தொடர்ந்து சரத்குமார், கரீம் மொரானி உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இதில் 5 பேருக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த கனிமொழி மற்றும் 5 பேரின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நேற்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஷாலி, இன்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். இதன்படி இன்று காலை டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கனிமொழி மனுவை தொடர்ந்து சரத்குமார், கரீம் மொரானியின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கனிமொழிக்கு இன்று ஜாமீன் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால் டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
s w ravikumar - chennai
11/25/2011 -- 18:2:4

ரஸ் இஸ் பெஹிந்த் ஆல் திஸ் ஸ்காண்டல் அண்ட் இட் லூக் லைக் தட் இஸ் வி தமக் லீடர்ஸ் ஆர் நாட் கெட்டிங் பில் ஈஸ்பெசில்லி இன் நோர்த் india

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,