சென்னை: பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வுக்கு தமிழகம் முழுவதும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் இன்று காலை எல்லா இடங்களிலும் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் திவா லாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக பஸ் மற்றும் மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக அறிவித்தார்.
மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். பஸ் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவிலேயே அமலுக்கு வந்துவிட்டது. உயர்த்தப்பட்ட பால் விலை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என ஆவின் அதிகாரி ஒருவர் கூறினார். மின் கட்டண உயர்வு எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் கோரிக்கை வைக்கும். அதனடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்டு கட்டண உயர்வை அறிவிக்கும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணம், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக நகர பஸ்களில் ரூ.1 முதல் ரூ.2 வரை கட்டணம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது ஒரேயடியாக ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சாதாரண புறநகர் பஸ்களில் கிலோ மீட்டருக்கு 28 பைசா வசூலிக்கப்பட்டது. இன்று முதல் 42 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு 14 காசு உயர்த்தப்பட்டது. விரைவு பஸ்களில் 32 காசுகளில் இருந்து 56 காசாகவும், சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் 38 காசுகளில் இருந்து 60 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 காசுகளில் இருந்து 70 காசாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2ல் இருந்து 3 ஆக உயர்த்தப்பட்டது.
சென்னையில் மாநகர பஸ்களை பொருத்தவரை சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.3 ஆகவும், எம் சர்வீஸ் பஸ்களில் ரூ.3-ல் இருந்து ரூ.4 ஆகவும், எல்எஸ்எஸ் பஸ்களில் ரூ.2.50-ல் இருந்து ரூ.3.50 ஆகவும், விரைவு பஸ்களில் ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆகவும், சொகுசு பஸ்களில் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும், ஏ.சி. பஸ்சில் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்ந்துள்ளது. எல்லா பஸ்களிலும் அதிகபட்ச கட்டணம் ரூ.5 வரை அதிகரித்துள்ளது. விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
பஸ் கட்டண உயர்வுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றன. முதல்வர் அறிவித்தகட்டண உயர்வு குறித்த செய்தி, நேற்றிரவுதான் டிவி செய்திகள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலான மக்களுக்கு கட்டண உயர்வு குறித்து தெரியவில்லை. அவர்கள் இன்று காலை பஸ்களில் பயணம் செய்தபோது புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். கண்டக்டர்களுக்கும் புதிய கட்டண விவரம் தெரியவில்லை. அவர்களுக்கு அந்தந்த டெப்போக்களில் கட்டண விவரம் குறித்த துண்டு சீட்டு வழங்கப்பட்டது. அதை பார்த்தே டிக்கெட் கொடுக்கின்றனர். இதனால் தாமதம் ஏற்பட்டது.
கட்டண உயர்வு குறித்து தெரியாத மக்கள், பஸ்களில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதும் குழப்பமடைந்தனர். பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கண்டக்டர்கள் கூறினர். பல இடங்களில் பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் பஸ்சுக்காக குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் கொண்டு வந்திருந்தனர். கட்டண உயர்வால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர், பஸ்சில் இருந்து இறங்கி நடந்தே சென்றனர். பல இடங்களில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு ரூ.11, 14 என இருவித கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. இன்று காலையில் அது அதிரடியாக ரூ.24 ஆக உயர்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கண்டக்டருடன் வாக்குவாதம் செய்தனர். கூடுதல் கட்டணம் தர முடியாது என சிலர் கூறினர். இதனால் பஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் இறங்கி பஸ் முன் மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பஸ்களில் இருந்த பயணிகளும் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மறியலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் மக்கள் கலைந்து செல்லவில்லை. திண்டுக்கல்- மணப்பாறை மார்க்கத்தில் மறவனூர் என்ற இடத்திலும் இன்று காலை 9.10 மணிக்கு மறியல் நடந்தது. அங்கும் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டன.
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, உலகநாதன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் வையாபுரி, நகர செயலாளர் முத்துக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை ரயிலடியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தனியார் பஸ்களில் கூட்டம்!
அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தனியார் பஸ்களில் இன்று பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது. இதனால், தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் அரசு பஸ்களில் இருந்து இறங்கி தனியார் பஸ்களை தேடி ஓடினர்.
மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1,000 ஆக உயர்வு?
சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் விருப்பம்போல் பயணம் செய்வதற்கு, ரூ.600 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாஸ், 16-ம் தேதி முதல் மறு மாதம் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த மாதத்துக்கான ரூ.600 பாஸை கடந்த 15-ம் தேதியே எல்லாரும் வாங்கிவிட்டனர். இந்நிலையில், பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாதாந்திர பாஸ் கட்டணமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இது ரூ.1000 ஆக உயர்த்தப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் இன்று மாலை வெளியிடுகிறது. அதன்பிறகு, ஏற்கனவே கடந்த 15-ம் தேதி ரூ.600 பாஸ் பெற்றவர்கள், கூடுதல் தொகையை அந்தந்த டெப்போக்களில் செலுத்தி பாஸில் முத்திரை பதித்து கொள்ள வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்திய முத்திரை இல்லாத பாஸ் செல்லாது என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
மெஷின்களுக்கு ஓய்வு!
சென்னை மாநகர பஸ்களிலும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களிலும் டிக்கெட் கொடுக்க, கண்டக்டர்களுக்கு கையடக்க எலக்ட்ரானிக் கருவி வழங்கப்பட்டது. அதன் மூலமே பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வந்தனர். இந்நிலையில், பஸ் கட்டண உயர்வு திடீரென அமலுக்கு வந்ததால், கையடக்க கருவியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதில் ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் கட்டணம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்கும். புதிய கட்டணத்தை கருவியில் பதிவு செய்ய அவகாசம் தேவை என்பதால் அவற்றை டெப்போ அதிகாரிகள் திரும்ப பெற்றுக் கொண்டனர். தமிழகம் முழுவதும் இன்று எல்லா பஸ்களிலும் பழைய முறையிலேயே டிக்கெட் கொடுக்கப்பட்டது.
‘ஒன் டே’ பாஸ் ரூ.50
சென்னையில் ஒரு நாள் முழுவதும் மாநகர பஸ்களில் விருப்பம்போல் பயணம் செய்வதற்கு (ஏ.சி. பஸ் தவிர்த்து), ரூ.30 பாஸ் கொடுக்கப்பட்டு வந்தது. பஸ்களில் கண்டக்டர்களிடமே இந்த பாஸை பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த ஒன் டே பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. பழைய பாஸ்களில் ரூ.30 என்ற கட்டணம் அடிக்கப்பட்டு, ரூ.50 என சீல் போட்டு வழங்கப்படுகிறது.
பஸ் katanam,பால்,விலை தேவைஈளை. ஏன் ennuru theriveelai . காரணம்
selvam - Madurai
11/18/2011 -- 14:17:53
இது தேவையா?
KARTHIKEYAN.S - NAMAKKAL
11/18/2011 -- 15:5:54
ஏழை எளிய மக்கள் ஏழையாகவே இருக்கின்றனர். பணக்கார மக்கள் பணக்காரர்களாகவே முன்னேறி கொண்டு இருக்கின்றனர். எனவே அரசு இந்த விலை உயர்வை கண்டிக்க தக்கது. இதே நிலைமை நீடித்தால் ஏழை மக்கள் வாழ்வதா ? சாவதா? ஏழை மக்களின் கண்ணீருக்கு அரசு என்ன பதில் கூற போகிறது. இலவச பொருட்கள் எதற்காக? யார் பயன் அடைகிறார்கள்? இதனால் என்ன பயன்? இலவசம் என்பது மனிதனை சோம்பேறி ஆக்கும் யுக்தி....................................................................
nathira - chennai
11/18/2011 -- 15:26:10
bus kattanam uyarvathal makkal athigama pathikkapatukintrana.
Alex - krishnagiri
11/18/2011 -- 15:34:32
Tamil Nadu CM is number one Off - Boyle,
World No:1 Worst lady
Dinesh T - coimbatore
11/18/2011 -- 15:58:43
increase the bus charge is good but not this much
Any way in SETC only dogs can travel no human beings
vasanth - chennai
11/18/2011 -- 16:10:3
மக்களுடைய வைத்து எரிச்சல் கொட்டிகாதிங்க
nice - chennai
11/18/2011 -- 16:12:9
ஐயா இதுவெலாம் கொஞ்சம் ஓவரா தெரில வுன்குளுக்கு............