கிழக்கு பிராந்திய கடற்படையில் காலியாக உள்ள 359 காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. ஸ்டோர் கீப்பர்: 15 (பொது-7, ஓபிசி-5, எஸ்டி-2, எஸ்சி-1). வயது: 18- 30க்குள். சம்பளம்: ரூ.4,000-ரூ.6000. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஸ்டோர் கீப்பர் பணியில் 2 வருட அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தகுதியுடன் மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவுடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தகுதியுடன் ஐடிஐ/இன்ஜினியரிங் கிரேடில் அப்ரன்டீஸ்ஷிப்புடன் 2 வருட பணிஅனுபவம் அல்லது 10ம் வகுப்புடன் ஸ்டோர் கீப்பர் பணியில் 5 வருட பணி அனுபவம். 2. ஸ்டெனோகிராபர்: 58 (பொது-39, எஸ்டி-13, எஸ்சி-6). வயது: 18-25க்குள். சம்பளம்: ரூ.4000-6000. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ஆங்கிலம்/இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தை எழுதும் வேகம். 3.லோயர் டிவிஷன் கிளார்க்: 232 (பொது-76, ஓபிசி-97, எஸ்டி-23, எஸ்சி-36) இவற்றில் 8 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும், 20 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 18-27க்குள். சம்பளம்: ரூ.3050-4590. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தை அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தை டைப் செய்யும் திறன், கம்ப்யூட்டர் திறன். 4. டெலிபோன் ஆபரேட்டர் (நிலை-2): 11 (பொது-6, ஓபிசி-2, எஸ்டி-2, எஸ்சி-1). இவற்றில் 4 இடம் மாற்றுத் திறனாளிகளுக்கும், 2 இடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.3,200-ரூ.4,900. தகுதி: 10ம் வகுப்பு தகுதியுடன் பிபிஎக்ஸ் போர்டு கையாளுவதில் அனுபவம் மற்றும் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். 5.சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஓஜி): 69 (பொது-46, எஸ்டி-13 எஸ்சி-10). இவற்றில் 6 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 6. சினிமா புரொஜக்ஷனிஸ்ட்: 1 இடம் (பொது). வயது: 18-25க்குள். சம்பளம்:ரூ.3050-4590 தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் அங்கீகார உரிமம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் 2 வருட பணிஅனுபவம் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி. 7. பயர் இன்ஜின் டிரைவர் (குருப்-2): 41 (பொது-27, எஸ்டி-7, எஸ்சி-7). இவற்றில் முன்னாள் ராணுவத்தினருக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 21-30க்குள். சம்பளம்: ரூ.3,050-4590. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமத்துடன் 3 வருட பணிஅனுபவம். 8. லேடி ஹெல்த் விசிட்டர்: 1 (ஓபிசி). வயது: 18-45க்குள். சம்பளம்: ரூ.5000-7000 தகுதி: 10ம் வகுப்புடன் பேசிக் நர்சிங் மிட்வொய்பரி கோர்சில் தேர்ச்சி. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.irfc.nausena.nic.in இணைய தளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.30.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook