+2 படித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சியுடன் வேலை
இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டீஸ் 2012 தேர்வுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கின்றன.
மொத்த காலியிடங்கள்: 42. வயது: 1.1.2025 தேதியின்படி 17 வயது நிரம்பியவராகவும், 21 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதி: கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் பிளஸ் 2 முதல் முயற்சியில் தேர்ச்சி. கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாக கொண்டு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பட் டப்படிப்பில் முதல் அல் லது இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. விண்ணப்பதா ரர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணைய தளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப் பிக்க கடைசி நாள்: நவ.21.