சென்னை: ஹோமியோகேர் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்திவரும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹோமியோபதி மருத்துவமனையின் 22வது கிளை திறப்பு விழா, சென்னை சிஐடி நகரில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு ஹோமியோகேர் இன்டர்நேஷனல் நிறுவன சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்ரீகாந்த் முரலவர், இயக்குனர் டாக்டர் சீனிவாச குப்தா தலைமை வகிக்கின்றனர். புதிய கிளையை கவர்னர் ரோசய்யா திறந்து வைக்கிறார். திறப்பு விழா சலுகையாக இலவச ஆலோசனையும், மருந்துகளுக்கு 30 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஹோமியோகேர் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் 21 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. 24 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த, சிறப்பு பட்டம் பெற்ற டாக்டர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இங்கு மூட்டு வலி, சர்க்கரை நோய், அலர்ஜி, குழந்தை இன்மை, தைராய்டு, செக்ஸ் மற்றும் ஹார்மோன் பிரச்னைகள், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட தீராத வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook