மேட்டூர் அணை 100 அடியை எட்டுது !
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் எனத் தெரிகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று காலை விநாடிக்கு 25,618 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 42,390 கன அடியாக உள்ளது. இதனால் நீர் மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை 96.38 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 99.20 அடியானது. ஒரே நாளில் 2.82 அடி உயந்துள்ளது. இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 63.80 டி.எம்.சியாக உள்ளது.