வன்னியர் சங்க கட்டிட விவகாரம் வேல்முருகன் உள்பட 13 பேருக்கு சம்மன்
கடலூர் : கடலூரில் வன்னியர் சங்க கட்டிடம் உரிமை தொடர்பாக இரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் மாஜி எம்எல்ஏ வேல்முருகன் உள்பட 13 பேருக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.
முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் பாமகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலூர் வன்னியர் சங்க கட்டிட உரிமை தொடர்பாக பிரச்னை எழுந்தது. இது தொடர்பாக பாமக தரப்பிலும், வேல்முருகன் தரப்பிலும் மாறி, மாறி மீட்டு தரக்கோரி கலெக்டர், எஸ்.பி., கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கோட்டாட்சியர் இளங்கோவன் இருதரப்பையும் சேர்ந்த 13 பேருக்கு சம்மன் வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சம்மன் வழங்க உள்ளனர்.
வரும் 19ம் தேதி வன்னியர் சங்க கட்டிடத்தின் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன், நீக்கப்பட்ட பாமக நிர்வாகிகள் திருமால்வளவன், ஆனந்த் மற்றும் கமலநாதன், புகார் மனுதாரர்கள் அமராவதி, முத்தையா, பாமக மாநில துணை பொது செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு இந்த சம்மன் வழங்கப்பட உள்ளது.