மல்லுவுட்ல ஜெயராம நடிகர் நடிச்ச படத்துல ஒரு சீன்ல நடிச்சி தரணும்ன்னு லால் நடிகர்கிட்ட கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... அவரும் நடிச்சி கொடுத்தாராம். அந்த சீனை படத்தோட புரொமோஷனுக்கு ஜெயராம நடிகரு யூஸ் பண்றாராம்... பண்றாராம்... இதை லால் நடிகர் காதுல சிலர் போட்டு கோபத்தை கிண்டி விடுறாங்களாம்... விடுறாங்களாம்...
பின்கோடு பட டைரக்டர் படத்துல நடிக்கிறாரு மூணுஷா நடிகை. டைரக்டரோட நட்பு கேங்ல நடிகையும் சேர்ந்துட்டாராம்... சேர்ந்துட்டாராம்... அடிக்கடி பார்ட்டின்னு பறக்கிற நட்பு டீமோடு நடிகையும் ஐக்கியமாகுறாராம்... ஐக்கியமாகுறாராம்...
வாய்ப்புகள் இல்லாம ஒதுங்கி இருந்தாரு சுஜியான நடிகை. சினிமா வட்டாரங்கள் தந்த அட்வைஸ்படி இயக்குனர்களோடு நட்பை வளர்த்தாராம்... வளர்த்தா ராம்... அதுக்கு கைமேல பலன் கிடைச்சிருக்காம். ஒரு சில படங்கள்ல தலை காட்டுறாராம்... தலை காட்டுறாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook