இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று 20-20ல் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன் எடுத்தது. ரெய்னா 39, டோனி 21, அஸ்வின் 17, கோக்லி 15, திவாரி 15 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன்பின் 3, பிரஸ்னன், போபரா தலா 2, சமீத்படேல் 1 விக்கெட் கைப்பற்றினர். துவக்க வீரர்களான உத்தப்பா 1, ரகானே 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிட்ச்சுக்கு தகுந்தபடி மெதுவாக வீசியதும் இந்திய அணியால் ரன்குவிக்க முடியாமல் போனது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பீட்டர்சன் 39 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 53 ரன்கள் விளாசினார். சமீத்படேல் 21 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 20-20ல் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது. தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், 15 ரன்கள் குறைவாக சேர்த்து விட்டோம். ஆடுகளத்திற்கு ஏற்ப இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தி விட்டனர். 150 ரன்கள் சேர்க்க வேண்டுமென களமிறங்கினோம். ஆனால் எல்லாம் மாறிவிட்டது என்றார். இங்கிலாந்து கேப்டன் ஸ்வான் கூறுகையில், கடந்த ஒரு மாதமாகவே எங்களது ஆட்டம் மோசமாக அமைந்துவிட்டது. வரும் போட்டிகளில் இது தொடராமல் பார்த்து கொள்வோம் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook