க.சுப்பு திடீர் மரணம் கருணாநிதி அஞ்சலி !
சென்னை:திமுக முன்னாள் எம்எல்ஏ க.சுப்பு இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70. திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளிலும் இருந்தவர் மீண்டும் திமுகவில் இணைந்தார். முன்னணி தலைவராக திகழ்ந்தவர், இறுதி வரை திமுகவில் இருந்தார். பல முறை எம்எல்ஏ, எம்எல்சி பதவிகளை வகித்தவர். நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.
திமுகவில் சுப்பு, ரகுமான்கான், துரைமுருகன் ஆகியோர் எம்எல்ஏக்களாக இருந்து ஆற்றிய உரைகள் புகழ் பெற்றவை. 3 பேரும் பேரவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது Ôஇடி, மின்னல், மழைÕ என்ற பெயரில் நாடு முழுவதும் சென்று உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தினர். எம்எல்ஏவாக இல்லாத காலத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தினார் சுப்பு.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சுப்பு, இன்று அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு பேபி ரமணி, வைஜெயந்தி என்ற மனைவிகளும் மகன்கள் மோகன், ஜெகவீர பாண்டியன், பாபு மகேந்திரன், மகள்கள் ராணி, குட்டி உள்ளனர்.
சுப்பு மறைந்த செய்தி அறிந்தும் திமுக தலைவர் கருணாநிதி, அவரது வீட்டுக்கு வந்து சுப்பு உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இறுதிச் சடங்குகள் நாளை காலையில் நடைபெறுகின்றன.