மூர் மார்க்கெட்டில் தீ விபத்து 14 கடைகள் எரிந்து நாசம்
சென்னை : சென்னை மூர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத் தில் 14 கடைகள் எரிந்து நாசமானது. சென்னை சென்ட¢ரல் ரயில் நிலையம் பின்புறம் மூர் மார்க்கெட் உள்ளது. இங்கு பழைய இரும்பு, ரப்பர் கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு கடை வைத்திருப்பவர்கள் இலவச கழிப்பறை வாசலில் குப்பைகளை கொட்டி வைத்திருந்தனர். நேற்று நள்ளிரவு யாரோ சிகரெட்டை அணைக்காமல் குப்பை கிடங்கில் வீசி சென்றுள்ளார். இதனால் குப்பை கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. அருகிலுள்ள கடைகளுக்கும் த¦ பரவியது. கடைக்குள் இருந்த ரப்பர் பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த பகுதியில் படுத்து இருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வேப்பேரி, ஐகோர்ட், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வண்டிகள் விரைந்து வந்தன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் 14 கடைகள் எரிந்து நாசமானது. அவை அனைத்தும் இரும்பு, ரப்பர் பொருள் விற்பனை கடைகள். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.