என் பெயரை வைத்தது ஏன்? இயக்குனரிடம் ரஜினி கேள்வி
பெருமான்- தி ரஜினிகாந்த்Õ பட இயக்குனர் ராஜேஷ் கண்ணன் கூறியது: எனது படத்தின் தலைப்பை பற்றி அறிந்ததும் ரஜினிகாந்த் என்னை அழைத்தார். அவரை சந்தித்தேன். Ôஉங்க பட தலைப்பில் என் பெயரை எதற்கு வைத்தீர்கள்?Õ என கேட்டார். Ôபடத்தின் முழு கதையும் கேட்டால் உங்களுக்கு அதற்கான காரணம் புரிந்துவிடும்Õ என்றேன். முழு கதையும் கேட்டார். கதை அவருக்கு பிடித்துபோனது. Ôசொன்னது போல் படமாக்குவீர்களா?Õ என கேட்டார். உறுதி தந்தேன். தனது பெயரை பயன்படுத்த சம்மதித்தார். படத்தில் நடிக்கும் புதுமுகம் அர்ஜுன், ரஜினியை போல் ஆக விரும்புகிறார். இதை வைத்துதான் முழு கதையும் நகர்கிறது. அதனால் படத்துக்கு இப்படி தலைப்பு வைத்தேன். இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்து வருகிறேன்.
Ô6 மில்லியன் டாலர் தி ரஜினிகாந்த்Õ என அதற்கு தலைப்பிட்டுள்ளேன். புதுமுகம் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கிறார்.