Untitled Document
2011
23
Oct
டிஆர்ஓ வீட்டில் நள்ளிரவில் தாக்குதல் : அரசு பயிற்சி நிலைய உயர் அதிகாரி கைது அண்ணா நகரில் திடீர் பரபரப்பு


அண்ணாநகர் : குடும்ப பிரச்னையில் தலையிட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, டிஆர்ஓ வீட்டை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய அண்ணா மேலாண்மை நிலைய பயிற்சி அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அண்ணா நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாநகர் எஸ்.பிளாக் 17-வது தெருவை சேர்ந்தவர் ஜவகர் சாந்தகுமார் (51). கரூரில் மாவட்ட வருவாய் அலுவலராக (டிஆர்ஓ) பணியாற்றியவர். தற்காலிக பணிநீக்கம் காரணமாக தற்போது வீட்டில் இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டுக்கு 5 பேர் வந்தனர். வீட்டு கதவை பலமாக தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் வெளியில் நிறுத்தியிருந்த 3 கார்களின் கண்ணாடி, ஸ்கூட்டர், சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். வீட்டு ஜன்னல் கண்ணாடி மற்றும் பூந்தொட்டியையும் உடைத்தனர்.

இதற்கிடையே, வெளியில் அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்த ஜவகர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த கும்பலை எஸ்.ஐ. மகேந்திரன், போலீஸ்காரர் அரி ஆகியோர் தடுத்தனர். அவர்களை அந்த கும்பல் கீழே தள்ளிவிட்டு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். டிஆர்ஓ வீட்டில் தாக்குதல் நடத்தியது அண்ணாநகர் 5-வது மெயின் ரோட்டை சேர்ந்த கண்ணன் (38) என்பது தெரியவந்தது. இவர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி அதிகாரியாக (டிஆர்ஓ ரேங்க்) உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார் என்பது தெரியவந்தது. கண்ணன் மற்றும் மாரி (25), வினோத்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் கண்ணன் கூறுகையில், ‘‘எனக்கும் என் மனைவிக்கும் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. பத்திரப்பதிவு துறையில் இன்னொரு பெண்ணுடன் நான் பழகி வருவதாக என் மனைவியிடம் ஜவகர் கூறியுள்ளார். அதனால் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில்தான் ஜவகர் வீட்டுக்கு சென்று தாக்கினேன்’’ என கூறியுள்ளார். கண்ணன் உள்பட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் ஒரு அதிகாரி வீட்டில் மற்றொரு அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம், அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,