விசாரணை கைதி தப்பி ஓட்டம்
திருப்பதி : சித்தூர் மாவட்டம் புத்தூர் மண்டலம் ஈசலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா ராணி(28). இவரது கணவர் திருப்பதியை சேர்ந்த சேஷாத்திரி. கூடுதல் வரதட்சணை கேட்டு ரேகா ராணியை, அவரது கணவர் சேஷாத்ரி, மாமியார் செங்கம்மா ஆகியோர் அடித்து உதைத்து துன்புறுத்தினார்களாம். இதுகுறித்து ரேகா ராணி, புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சேஷாத்ரியிடம் விசாரணை நடத்த சென்றனர். இதையறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் நெல்லூரில் பதுங்கியிருந்த சேஷாத்ரியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, புத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். காவல் நிலையத்தில் இருந்த சேஷாத்திரி நேற்று பிற்பகல் திடீரென தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.