மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு நர்சிங் டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 40 (பொது-21, ஓபிசி-10, எஸ்சி-6, எஸ்டி-3). சம்பளம்: ரூ.9,300-ரூ.34,800. வயது: 7.11.2011ன்படி 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. அரசில் இதே பணியில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியான அனுபவம் உள்ள பொதுப் பிரிவினருக்கு-42 வயதும், ஓபிசியினருக்கு-45 வயதும், எஸ்சி,எஸ்டி யினருக்கு 47 வயதும் இருக்க வேண்டும். தகுதி:General Nursing and Midwife™ டிப்ளமோ/டிகிரி முடித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய் திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர் முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டியின ருக்கு ரூ.250/-. இதை Accoînt‡ Officer, JIPMER என்ற பெயரில் ஜிப்மரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.nic.in இணைய தளம் அல்லது அக்.8-14 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.7.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook