ஐஸ்வர்யாவுக்கு நாளை ஆடம்பர வளைகாப்பு!
மும்பை: ஒன்பது மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய்க்கு நாளை ஆடம்பரமான முறையில் வளைகாப்பு நடக்கிறது. அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யா ராய் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பமான பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு பிரமாண்டமான முறையில் வளைகாப்பு நடத்த மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சம்பிரதாய முறைப்படி நடத்த திட்டமிட்டுள்ளனர். பட்டுப்புடவை, தங்க நகைகள் வாங்கப்பட்டுள்ளன. வீடு முழுவதும் தோரணங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாளை வளைகாப்பு விழா நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
வளைகாப்பு முடிந்த கையோடு பிரசவத்துக்காக ஐஸ்வர்யா ராய் தாய் வீடு செல்கிறார். அடுத்த மாதம் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருக்கின்றனர். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று அமிதாப்புக்கு எண் கணித ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர் தெரிவித்திருக்கிறார்.