வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரிப்பேர் : ஜி.கே.வாசன்
சென்னை: பீமண்ணா தோட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அவரது மனைவி சுனிதா வாசன் ஆகியோர் இன்று காலை 9 மணிக்கு வாக்களித்தனர். அவருடன் மேயர் வேட்பாளர் சைதை ரவி வந்தார்.
வாக்களித்த பின் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளால் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் நல்ல நிர்வாகம் அமைய மக்கள் அளிக்கும் வாக்கு, ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
காலை 7 மணி முதல் 9 மணி வரை பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதே போல் கண்காணிப்பு கருவிகள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் கண்காணிப்பு கருவிகளை இயக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.